+2 பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 19ம் தேதி வெளியீடு - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை
+2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரங்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் இன்று (16-7-2021) அறிவித்துள்ளது.
2020 - 21ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12ம் வகுப்பு) பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கும் நாள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், 19.07.2021 அன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.
பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11.00 மணி முதல் http://www.dge.tn.gov.in/ , http://dge.tn.nic.in/ என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
என தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

No comments
Thank you for your comments