Breaking News

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கினார் அமைச்சர் கணேசன்

கடலூர்:

 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்களை அமைச்சர் கணேசன் வழங்கினார்.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மா புடையூர் அரசு ள்ளியில் மங்களூர் ஒன்றிய வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைதுறை சார்பில்  உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு வேளாண் இயந்நநிரங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மங்களூர் வேளாண்மை உதவி இயக்குநர் அமுதா தலைமை தாங்கினார். 

கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் ,தோட்டக்கலை உதவி இயக்குநர் அருள்தாசன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வெ கணேசன் கலந்துகொண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 39லட்சத்து 18 ஆயிரத்து 877 மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை வழங்கினார்.

பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு  அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய  தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டுவன், அடரி சின்னசாமி,பட்டூர் அமிர்தலிங்கம், திட்டை நகரசெயலாளர் விபிபி பரமகுரு,மங்களூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.என்.டி சங்கர்,  திட்டை நகர இளைஞரணி செயலாளர் சேதுராமன்,நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி,விசிக மங்களூர் ஒன்றிய பொருளாலர் தொழுதூர் இரா.ரமேஷ்,தோட்டக்கலை உதவி அலுவலர் சாமிநாதன்உதவி வேளாண்மை அலுவலர் கணேஷ்பாலன், விஸ்வநாதன், கோவிந்தராஜ் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments