ஏழைப்பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
ஈரோடு:
மாவட்ட சமூகநலத்துறையின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழைப்பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழைப்பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சி.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:-
1) வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் (வட்டாட்சியரிடம் பெற வேண்டும்)
2) இருப்பிடச் சான்று (வட்டாட்சியரிடம் பெற வேண்டும் அல்லது ரேஷன் கார்டு)
3) தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது) (6 மாத கால பயிற்சி)
4) வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று
5) சாதிச் சான்று நகல்
6) கடவுச்சீட்டு (Passport Size Photo) அளவு மனுதாரின் கலர் புகைப்படம் - 2
7) விதவை, கணவனால், கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல்
8) ஆதார் அடையாள அட்டை நகல்
எனவே, மேற்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் / ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 31.07.2021-க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம் 6-வது தளம்,
ஈரோடு மாவட்டம்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு.
No comments
Thank you for your comments