தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அய்யனார்குளம் நடுத் தெருவைச் சேர்ந்த சண்முகையா தேவர் மகன் உக்கிரமசிங்கம் (50). இவருக்கு சொந்தமான தோட்டம் ஊருக்கு கிழக்கு பக்கம் உள்ளது.
அய்யானார் குளம் மலைப் பகுதியில் மான், காட்டுப் பன்றி அதிகளவில் உள்ளது. நீர் தேடி மான்கள் அவ்வபோது ஊருக்குள் தவறி வருவது வழக்கம்.
நேற்று மாலை அய்யனார்குளம் மலையிலிருந்து தப்பிவந்த மூன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று உக்கிரமசிங்கம் கிணற்றில் தவறி விழுந்தது.இதுகுறித்து உக்கிரமசிங்கம் ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலை தலைமையில் மீட்பு படை வீரர்கள் விசுவநாதன், திருமலைக்குமார், மாடசாமி,ஆனந்தகுமார், காளிமுத்து ஆகியோர் அடங்கிய மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிணற்றில் தவறி மானை உயிருடன் மீட்டு அங்குள்ள மலைப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
No comments
Thank you for your comments