கழுதூர் டூ கடலூர் அரசு பேருந்துவை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் கணேசன்..!
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் கிராமத்தில் இருந்து வேப்பூர், கண்டப்பங்குறிச்சி , விருத்தாசலம், நெய்வேலி வழியாக கடலூர் வரையிலும்,
சிறுப்பாக்கம் ஊராட்சியிலிருந்து பணையாந்தூர், தொழுதூர் வழியாக அரியலூர் வரையிலும்,
லட்சுமணாபுரம் முதல் தொழுதூர்,உளுந்தூர்பேட்டை,விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின் பேரில் முதன் முதலாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து இயக்கப்பட்டது.
இந்த பேருந்து இயக்கத்தை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு பேருந்து இயக்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இங்கு கிராம பகுதியில் இருந்து மாவட்ட, மாநகரங்கள் போன்ற முக்கிய நகரத்திற்கு போக்குவரத்து தொடங்கியதில் அதன் சுற்று வட்டார கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கல்லூரி, மேல் சிகிச்சை மருத்துவ மனை, ஆட்சியர் அலுவலகம் போன்ற முக்கிய இடங்களுக்கு பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டுவன், அடரி சின்னசாமி, மங்களூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.என்.டி சங்கர், தளபதி கிளை செயலாளர் பாண்டு, பொருளாளர் இளையராஜா, இளைஞரணி பாலாஜி, சிறுப்பாக்கம் கவுன்சிலர் ராமலிங்கம், ஆலம்பாடி கவுன்சிலர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்
No comments
Thank you for your comments