Breaking News

நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 76 வீடுகள் அதிரடியாக இடிப்பு...

கோவை : 

கோவை வடவள்ளி அருகே பி.என்.புதூா் கோகுலம் காலனியில் கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வரும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 76 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.   

கோவை மாநகராட்சிப் பகுதியில் நீா்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அகற்ற சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

இதன்படி கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்களைச் சுற்றி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றி வருகிறார்கள்-.

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. 

இதனால் அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழக்கப்பட்டன. இதனால் சில மாதங்களுக்கு முன்பு சுமார் 1600 பேர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டனர்.அவர்களது வீடுகள் முதல் கட்டமாக இடிக்கப்பட்டன.

இதனிடையே மீதமுள்ள வீடுகள் மற்றும் அப்பகுதியில் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்துக்கு மேற்பட்ட கோயில்களும் . மாநகராட்சி நிர்வாகமும் போலீசாரும் வந்து கடந்த திங்கட்கிழமை இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவராம் நகரில் பொதுமக்கள் கோயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வடவள்ளியை அடுத்த பி.என்.புதூா் கோகுலம் காலனியில், கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வரும் வாய்க்காலை ஆக்கிரமித்து 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு 76 வீடுகள் கட்டப்பட்டு இருநதன. இந்த வீடுகளில் குடியிருந்தவா்களுக்கு குடிசை மாற்று வாரியம் சாா்பில், கோவைப்புதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவா்கள் அந்த வீடுகளுக்கு குடிபெயா்ந்து சென்றதைத் தொடா்ந்து, மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரி ரவிசந்திரன் தலைமையில் ஆக்கிரமிப்பு வீடுகள் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வியாழக்கிழமை அன்று இடித்து அகற்றப்பட்டது. மாற்று வீடுகளுக்கு செல்லாமல் இருந்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கலைந்து போக செய்தனர்.


No comments

Thank you for your comments