அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு...!-கடைசி தேதி 31-08-2021
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-2022ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2021ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) வாயிலாக பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.com <http://www.tamilvalarchithurai.com>) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 0416-2256166 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ‘அ’ பிரிவுக்கட்டடம், 4ஆம் தளம், அறை எண்.421இல் இயங்கிவரும் வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 31.08.2021 க்குள் அளிக்கப்பட வேண்டுமென வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிகார பூர்வ இணையதளம் விண்ணப்பம் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்...
https://drive.google.com/file/d/1u-630423YctTF_nu2UVKYnJ8VKTLkXP6/view
No comments
Thank you for your comments