2வது குழந்தை பிறந்துள்ளது... உருக்கமாக பதிவிட்டுள்ளார்... நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மறைந்த தனது தந்தையின் புகைப்படத்துக்கு முன்பாக தன் கை விரல்களை மகன் பற்றியுள்ளது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், 18 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தனது தந்தை தற்போது மகன் வடிவில் மீண்டும் தனது விரலை பிடித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் பல வருட வலியைப் போக்க உயிர்வலி தாங்கிய மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி தெரிவிப்பதாக உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் காமெடியனாக அடியெடுத்து வைத்து இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் தனது மாமா மகள் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார்.

No comments
Thank you for your comments