Breaking News

வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு உள்ஒதுக்கீடு அரசாணை பிறப்பிப்பு... முதலமைச்சருக்கு குவியும் நன்றிகள்...

சென்னை

வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு. பிப்ரவரி 26 முதல் செயல்படுவதற்கான அரசு ஆணையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே. மணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் S.P.வெங்கடேஸ்வரன், தி. வேல்முருகன் ஆகியோர் இன்று (27-7-2021) நன்றி தெரிவித்துள்ளனர்.


அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு 10.5%, சீர் மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு 2.5% சிறப்பு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பினர் இன்று நன்றி தெரிவித்தனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  

வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு குறித்த அரசாணை அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

பாமக தலைவர் ஜி.கே. மணி 

பாமக சட்டமன்ற தலைவர் ஜி.கே. மணி, சட்டமன்ற உறுப்பினர் S.P.வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம், அருள் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

வேல்முருகன்  



தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

No comments

Thank you for your comments