மேட்டூர் அணையைத் இன்று திறந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சேலம்:
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் இன்று தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் காவிரி ஆற்றில் மலர் தூவினார்.
அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இருக்கும்பட்சத்தில் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். தற்சமயம் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதாலும், பருவ மழையை எதிர்நோக்கியும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கீழே உள்ள இந்த செய்தியை படிக்க லிங்க் கிளிக் செய்யவும்
*16ம் தேதி மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்....
**வண்டலூர் உயிரியல் பூங்காவில் ராகவ் என்ற சிங்கம் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு
அதன்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். இதற்காக மேல்மட்ட மதகு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அங்கிருந்து மின் விசையை இயக்கி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்பு அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலமாக பாசனத்திற்கான தண்ணீர் வெளியேற்றப்பட்டன. கால்வாயில் சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரை மலர்தூவி மு.க.ஸ்டாலின் வரவேற்று வணங்கினார்.
மேட்டூர் அணையில் முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி முதல் 10,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 96.8 அடியாக உள்ளது. மேட்டூர் அணை திறப்பால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மாவட்டங்கள் பயன்பெறும். ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறந்ததால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையை திறந்த முதல் திமுக முதலமைச்சர் என்ற பெருமையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றுள்ளார்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். முப்போக விளைச்சலுக்கு மேட்டூர் அணை நீர் முக்கியமானது. அணையின் நீர் இருப்பைப் பொறுத்து 12ஆம் தேதிக்கு முன்னதாகவோ, ஒரு சில நாட்கள் கழித்தோ அணை திறக்கப்படும். இந்த முறை 12ம் தேதியே திறந்தாக வேண்டும் என உறுதியாக இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதை செயல்படுத்திவிட்டார்.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் கடைமடை வரை பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1, 170 அடியாகவும், அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு மாவட்டம் பாசூர் வரை காவிரி ஆற்றில் 7 கதவணைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி 7 தடுப்பணைகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே கதவணைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
அணை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, மதிவேந்தன், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
மேட்டூரில் தண்ணீர் திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் கூறியதாவது,
குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணையை திறப்பதன் மூலம் சரியான காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. தமிழகத்தில் பாசனப் பரப்பை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நடவடிக்கை எடுக்கப்படும். உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
ஜூன் 17-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். ஆனால், அந்த தேதி இன்னும் முடிவாகவில்லை என்று கூறியுள்ளார்.
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 12 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார்.
No comments
Thank you for your comments