மத்திய அரசை பாரத பேரரசு என்று அழைப்போம்- நடிகை குஷ்பு
சென்னை:
ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு வெளியிடும் அனைத்து அறிக்கைகளிலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகின்றனர். அதேநேரம் ஒன்றிய அரசு என்ற இந்த சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒன்றிய அரசு என்பது சட்டப்படியானதுதான் என்று சில கட்சிகள் ஆதரவாகவும் கருத்துக்கள் தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில் பா.ஜனதா பிரமுகரும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறவர்கள் மத்திய அரசின் ஒரு பகுதியாக இருந்து அதிகபட்ச நலன்களை பெற்றவர்கள் தான். துரதிருஷ்டவசமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் இருந்து நாட்டை ஆட்சி செய்தவர்களும் இப்படி அழைக்கிறார்கள்.
கீழே உள்ள செய்தியை படிக்க லிங்க் கிளிக் செய்யவும்
16ம் தேதி மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்....
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ராகவ் என்ற சிங்கம் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு
தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தால் நாம் பாரத பேரரசு என்று அழைப்போம். தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே. வாழ்க பாரத தேசம். வாழ்க தமிழகம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் உள்ளார்.
No comments
Thank you for your comments