Breaking News

கோவில்களின் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

சென்னை:

முதல் கட்டமாக 3,44,647 ஏக்கர் கோவில் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நில விவரங்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். 

முக்கிய செய்தி படிக்க கிளிக் செய்யவும் ==>> : இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதையடுத்து கோவில் நிலங்களின் தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நில விவரங்கள்  https://hrce.tn.gov.in/என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

முதல் கட்டமாக 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இன்னும் கோவில்களின் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் இணைக்கப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யவும் =விரைவில் கூடுகிறது தமிழக சட்டசபை - பட்ஜெட் தாக்கல்...!

No comments

Thank you for your comments