Breaking News

கலர் கலராக உருவெடுக்கும் பூஞ்சை நோய்... நாட்டில் முதன்முதலாக "பச்சை பூஞ்சை" நோய் பாதிப்பு..!

போபால்:

நம் நாட்டிலேயே முதல்முறையாக பச்சை பூஞ்சை நோய் ஒருவரை தாக்கி உள்ளது.. அவர் இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.


கொரோனாவைரஸ் எந்த மாதிரியான நோய் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.. அதற்குள் 2வது அலை, 3வது அலை என மிரட்டி கொண்டிருக்கிறது.

இவைகளுக்கு நடுவில் கொரோனாவுக்கு ஃடப் கொடுக்கும் வகையில் கலர் கலராக, பூஞ்சை நோய் பரவ ஆரம்பித்துவிட்டது.. பாகுபாடு இல்லாமல் எல்லா மாநிலங்களையும் இந்த கருப்பு பூஞ்சை ஆக்கிரமித்து வருகிறது.

குறிப்பாக மொத்த வடமாநிலமும் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.. இதற்கு அடுத்தபடியோ வெள்ளை பூஞ்சை ஒன்று புதிதாக பரவ ஆரம்பித்தது.. பீகாரில் சிலருக்கு இந்த வெள்ளை பூஞ்சை நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த வெள்ளை பூஞ்சை படுபயங்கரமானதாம்.. கருப்பு பூஞ்சையை விட மோசமானதாம்.. 

கருப்பு பூஞ்சை ஸ்ட்ரைட்டா நுரையீரலை தாக்கும் என்றார்கள்..ஆனால், இந்த வெள்ளை பூஞ்சையானது, நுரையீரலை மட்டுமல்லாமல் தோல், வயிறு, நகங்கள், சிறுநீரகம், மூளை, வாய், என உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதித்துவிடுமாம். உடம்பில் நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், புற்றுநோய் நோயாளிகள், ரொம்ப காலத்திற்கு ஸ்டீராய்டுகளை உபயோகிப்பவர்களை இந்த பூஞ்சை நோய்கள், பற்றி கொள்ளும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.

அதனால் கருப்பு, வெள்ளை பூஞ்சை நோய் என்றாலே வடமாநில மக்களுக்கு கலக்கம் வந்துவிடுகிறது. இப்படிப்பட்ட சூழலில், மஞ்சள் பூஞ்சை நோய் உத்தரபிரதேசத்தில் உருவாகியது கண்டறியப்பட்டுள்ளது.. இந்த மஞ்சள் பூஞ்சையானது, கருப்பு, வெள்ளை பூஞ்சைகளை விட இன்னும் பயங்கரமானதாம்.. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், பச்சை பூஞ்சை நோய் உருவெடுத்துவிட்டது.. 

இதில் ஒருவர் நேரடியாக பாதிக்கப்பட்டும் விட்டார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் (34 வயது). இவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று வந்துள்ளது.. அதனால், ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார்.. பிறகு டிஸ்சார்ஜ் ஆகியும் வந்துவிட்டார்.. ஆனால், மறுபடியும் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. 

அப்போதுதான் டாக்டர்கள் டெஸ்ட் செய்து பார்த்தனர். ஒருவேளை அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருக்குமோ என்று சந்தேகத்தின்பேரில் டெஸ்ட் செய்தனர்.. ஆனால், பச்சை பூஞ்சை தொற்று அவருக்கு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.. ஏற்கனவே கொரோனா தாக்கியபோது, அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது... இப்போது இந்த பச்சை பூஞ்சை தாக்கிவிடவும், நிலைமை இன்னும் மோசமாக உள்ளது..இந்த பச்சை பூஞ்சை தாக்கியதால், மூக்கு வழியே ரத்தம் கசிய ஆரம்பிக்குமாம்.. அதிகமான காய்ச்சல் வருமாம்.. இதெல்லாம்தான் இதன் அபாய அறிகுறிகள்.. இப்போது பச்சை பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட நபர், அவசர அவசரமாக சிகிச்சைக்காக விமானம் வழியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்...

அவருக்கு இன்னும் காய்ச்சலும் குறையவில்லை.. அவரது காய்ச்சல் 103 டிகிரிக்கு கீழே குறையவில்லை. நாட்டிலேயே இவர்தான் பச்சை பூஞ்சை நோய் தொற்றுக்கு ஆளான முதல்நபர்.. அதனால், இந்த நோயின் தாக்கம் எப்படி இருக்கும்? என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இப்போது வரை தெரியவில்லை என்கிறார்கள் இந்தூர் மாவட்ட சுகாதார துறையின் மேலாளர் அபூர்வா திவாரி.

இது சம்பந்தமாக டாக்டர்கள் தொடர் டெஸ்ட்களில் இறங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments