கால்பந்து வீரர் ரொனால்டா-வின் செயலால் கோலா நிறுவனத்துக்கு சுமார் ரூ.29,300 கோடி லாஸ்..
லிஸ்பன்:
லிஸ்பனில் வைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கோகோ கோலாவை ஓரங்கட்டிவிட்டு தண்ணீரை குடிக்க கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவுறுத்தியதால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வேகமாக குறைந்து நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.29,320 கோடி நஷ்டத்தை சந்தித்தது.
நேற்றைய தினம், யூரோ கால்பந்து போட்டித் தொடர் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு லிஸ்பனில் நடந்தது. அங்கு அவர் அமர்ந்திருந்த டேபிளிலில் இரு கோகோ கோலா பாட்டில்களும் ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தன. அவற்றை பார்த்த ரொனால்டோ கோலா பாட்டில்களை அப்படியே ஓரங்கட்டினார். தண்ணீர் பாட்டிலை மட்டும் உயர்த்தி காட்டினார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் தண்ணீரை குடியுங்கள் என காட்டிய செய்கை உலகம் முழுவதும் வைரலானது.
இதனால் அந்த கோலா நிறுவனம் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ 29,300 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இவரது செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்னர் 242 பில்லியன் டாலராக இருந்த கோலாவின் சந்தை மதிப்பு இந்த சில விநாடி நிகழ்வுக்கு பிறகு 238 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது. அது போல் அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன.
ரொனால்டோ தனது உணவுப் பழக்க வழக்கத்தில் மிகவும் கட்டுப்பாடு கொண்டவர் என கூறப்படுகிறது. தனது மகனுக்கும் உணவு கட்டுப்பாடு குறித்து ரொனால்டோ அறிவுறுத்துவார்.
ஐரோப்பிய கண்டத்தில் ரொனால்டோவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர் ஏற்கெனவே இது போன்ற குளிர்பானங்களுக்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments