Breaking News

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

வேலூர்: 

வேலூர் மாவட்டம் கணியம்பாடி  எஸ்.எஸ் மகாலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) திரு.ஜெ.பார்த்தீபன் அவர்கள்,  ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் இன்று (03-06-2021)  துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு துணை இயக்குநர் சுகாதார பணிகள் முன்னிலை வகித்தார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் முகாம் அமைத்தும், அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

இந்த தடுப்பூசி முகாமில் கலந்துக் கொண்டு அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) திரு.ஜெ.பார்த்தீபன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.உமா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பி.அமுதவள்ளி, திரு.ரகு மற்றும் மருத்துவர்கள் மரு.துரைராஜ், மரு.நவீன் குமார், மரு.கார்த்திக், துணை வட்டாட்சியர் திரு.சுரேஷ் மற்றும் பகுதி சுகாதார செவிலியர் திருமதி. தத்திமா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

*****

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.


No comments

Thank you for your comments