அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 50 ICU படுக்கைகளை வழங்கல் -வேலூர் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம்
வேலூர்:
வேலூர் அரசு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வேலூர் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சார்பில் ரூ.10 இலட்சம் மதிப்பிலான 50 ICU படுக்கைகளை சங்கம் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) திரு. ஜெ. பார்த்திபன் அவர்களிடம் இன்று (03 06.2021) வழங்கினார்கள்.
வேலூர் மாநகர தங்கம் விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா பரவல் மூலம் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரச அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு
50 ICU படுக்கைககள், ஆக்சிஜன் ஸ்டேன்டு படுக்கை விரிப்பு மற்றும் உபகரணங்கள் என மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பிலான பொருட்களை தலைவர், திரு. C.P.ராமகிருஷ்ணன், துணை தலைவர், பெப்சி சீனிவாசன் செயலாளர் திரு. வெங்கடேசன், நிர்வாகிகள் E.சொக்கநாதன், திருநாவுக்கரசு, விஜய், ஷியாம் மற்றும் நிர்வாகிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.செல்வி, துணை இயக்குநர் மரு. மணிவண்ணன் மரு. ராஜவேலு மற்றும் மருத்துவர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.
No comments
Thank you for your comments