டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு- பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னை:
சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
![]() |
மாநில தலைமை அலுவலகம் கமலாலயம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் |
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செய்லபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படவேண்டும் என தமிழக பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்வார்கள் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். அதன்படி பாஜகவினர் இன்று அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் உள்ள பாஜக தலைமையகமாக கமலாலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
கீழே உள்ள இந்த செய்தியை படிக்க லிங்க் கிளிக் செய்யவும்
நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு...! - 18 கட்டுப்பாடுகள் அறிவிப்பு
பின்னர் இப்போராட்டம் குறித்து பேசிய எல்.முருகன், தமிழகத்தில் டீக்கடைகளை திறக்காமல், மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
சமூக வலைதளத்தில் பாஜகவினர் #TasmacAgitation #Bantasmack என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு திமுகவினர் எதிர்கேள்வி எழுப்பி வருகின்றனர்..
உங்கள் கூட்டணி ஆட்சி நடக்கும் பாண்டிச்சேரியில் மது கடைகளை மூட சொல்லுங்க சார்,அதே போல் பாண்டிச்சேரியில் மது கடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் எப்போது நடத்துவாங்க சார்?
BJP ஆளும் பாண்டிச்சேரி,கர்நாடகா,உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மது கடைகளை எப்போது மூடுவிங்க.... என்று பல்வேறு பதிவுகள் பதிவிடப்பட்டு வருகிறது.
No comments
Thank you for your comments