80 கோடி ஏழை மக்களுக்கு தீபாவளி வரை இலவச ரேஷன்: பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடெல்லி:
பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் மூலம் ஏழை மக்கள் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்க மத்திய அரசு முடிவு. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தற்போது ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய நிலையில், தற்போது ஒரு லட்சமாக குறைந்துள்ளது.
இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கொரோனா தொற்றால் இந்தியா சந்தித்து வரும் சவால்கள், மருத்துவ கட்டமைப்பு, தடுப்பூசி போன்றவற்றை பற்றி குறிப்பிட்டார்.
அப்போது பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் மூலம் ஏழை மக்கள் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
No comments
Thank you for your comments