முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு சம்மன்
சென்னை:
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வருகிற 9ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
நடிகை சாந்தினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிகண்டனை வருகிற 9ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் அவரது உதவியாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இச்சம்மனில் 3 பேரையும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments