Breaking News

தீவிர கஞ்சா வேட்டை..... 6 நாட்களில் 51 பேர் அதிரடி கைது...

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு  எதிரான, குறிப்பாக கஞ்சாவிற்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் ஈடுபட்டு வருகிறார். தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டார். 


தொடர் நடவடிக்கையாக நேற்றைய தினம், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கன்னியாகுமரி காவல்நிலையத்தில் கொட்டாரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(24), என்பவரையும், கோட்டார் காவல் நிலையத்தில் இளங்கடை பகுதியை சேர்ந்த காசிகல் நிபான் (22), என்பவரையும், பூதபாண்டி காவல் நிலையத்தில் பிரேம்குமார் என்ற ஆப்பிள் பிரேம்குமார் (21) என்பவரையும், பிடித்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் கடந்த 5 நாளில் மட்டும் கஞ்சா விற்பனை செய்தாக 51 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து அவர்கள் வைத்திருந்த 16.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்ட போலீசார் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments