Breaking News

28ம் தேதி முதல் கூடுதல் தளர்வு அறிவிப்பு - வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்

வேலூர்: 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையில் நோய் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 21.06.2021 முதல் 28.06.2021 காலை 6 மணி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கினை தளர்வு செய்து நடைமுறையில் இருந்து தற்போது முடிவுக்கு வரும் நிலையில் 28.06.2021 காலை 06.00 மணி முதல் 05.07.2021 காலை 06.00 மணி வரை ஒரு வார காலத்திற்கு வகை 2ல் உள்ள வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட புதிய தளர்வுகளை வழங்கியுள்ளது.  இந்த தளர்வுகள் வேலூர் மாவட்டத்தில் 28.06.2021 காலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.




கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா நோய்த் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளில் தெரிவித்துள்ளவாறு முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிழப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுமாறும், கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பினை நல்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.


No comments

Thank you for your comments