Breaking News

2வது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்கல் - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

வேலூர்:

வேலூர், காட்பாடி  ரங்காலயா திருமண மண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க   4 இலட்சத்து 29 ஆயிரத்து 234 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2 ஆயிரம் வீதம் மொத்தம் 85 கோடியே 84 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் நிதி உதவியும் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்புகளையும்,

 சமூக நலத்துறை  சார்பில் 1059 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், 50 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும்,   3ஆம் பாலினத்தவர் 343 நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வீதம் 6 இலட்சத்து 86 ஆயிரம் நிதியையும்  மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் இன்று  (14.06.2021 ) வழங்கினார்.   மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஏ.பி.நந்தகுமார், திரு.ப.கார்த்திகேயன், திரு.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திரு.அ.செ. வில்வநாதன் அவர்கள்  திருமதி.அமலு விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் திரு.சா.திருகுண ஐயப்பதுரை அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு காலத்தில் சிறப்பாக செயல்படுவதாக ஆங்கில நாளேடுகள், அண்டை மாநில நாளேடுகள் தலையங்கம் எழுதுவதாக மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் பெருமிதம்.  பேரணாம்பட்டு வட்டம் பத்தரபள்ளி, அணைக்கட்டு வட்டம் மேல்அரசம்பட்டு ஆகிய பகுதியில் 2 அணைகள் கட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் தகவல் தெரிவித்தார்.

மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது,  

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த அறிவிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து குடும்ப அட்டைதாரத்களுக்கும் தலா 2 ஆயிரம் வீதம் 2 தவணைகளாக வழங்கவும், 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பு இன்று வழங்கப்படுகிறது.  

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு காலத்தில் படுக்கை வசதிகள் ஆக்ஸிஜன் வசதிகள் மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் இருந்த குறைபாடுகள் உடனுக்குடன் களையப்பட்டு மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் கொரோனா நோய் தொற்று நமது மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்க தென்பண்ணை ஆற்றிலிருந்து படேதால்வாய் ஏரியிலிருந்து பர்கூர் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது வரும் உபரி நீரை பாலாற்றில் கொண்டு வரும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் ஏற்பட்டால் பாலாற்றில் 3 மாதம் தொடர்ந்து தண்ணீர் ஓடும் நிலை ஏற்படும். மோர்தானா அணையிலிருந்து இடதுபுற கால்வாய் கடைமடை பகுதியான அன்னங்குடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இடதுபுற கால்வாயில் உள்ள விவசாயிகள் கடைமடை பகுதி வரைக்கும் தண்ணீர் கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அன்னங்குடி ஏரி நிரம்பிய பிறகு இடதுபுற கால்வாய் ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களே நீரினை பகிர்ந்தளிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதுவரை கால்வாயை ஒட்டியுள்ள விவசாயிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

மேலும், அகரம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது. வருவாய் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து கருத்துரு வழங்கினால் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அகரம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படும். மேல்அரசம்பட்டு அணை குறித்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விரைவில் முடிவிற்கு கொண்டு வந்து அணைக்கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படும்.  

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் கொரோனா தாக்கத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு அண்டை நாடுகளுடன் தொடர்பை துண்டித்தும் நிர்வாகமே ஸ்தம்பித்து போன நிலையில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா நோயாளிகளை அவர்கள் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்று மனிதாபிமானத்துடன் விசாரித்தார். வேலூர் மாவட்டத்தில் 4 இலட்சத்து 29 ஆயிரத்து 234 குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் வீதம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. 2 வது தவணையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளான ஆவின் பால் ரூ.3 விலை குறைப்பு, நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நலத்திட்டம் வழங்குதல் போன்ற பணிகளையும் இந்தியாவிற்கே முன்னோடியாக கொரோனா தடுப்பு காலத்தில் தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என ஆங்கில நாளேடுகள், அண்டை மாநில நாளேடுகள் தலையங்கம் எழுதுகிறது.

பொதுமக்கள் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி, தடுப்பூசி செலுத்தி கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்   என்றும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் தமிழக முதல்வர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.முகமது சஹி, கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி மேலாண்மை இயக்குநர் திருமதி.ரேணுகாம்பாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) திரு.விஜயராகவன்,  (வளர்ச்சி) திரு.புருஷோத்தமன், துணை ஆட்சியர் திரு.காமராஜ்,    துணை பதிவாளர்கள் திரு.முரளி கண்ணன், திரு.அருட்பெரும்ஜோதி, சரக பதிவாளர்கள் திரு.ரமேஷ் குமார், திரு.கருணைவேல், திரு.ஏழுமலை, திரு.அசோகன், வட்டாட்சியர் திரு.பாலமுருகன், அலுவலக மேலாளர் திரு.பாலாஜி மற்றும் வருவாய்த்துறை, கூட்டுறவுத் துறை, சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.

 





No comments

Thank you for your comments