Breaking News

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து 15 நாள் போராட்டம் அறிவிப்பு

 புதுடெல்லி

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.


15 நாள் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சாரி கட்சிகளின் சார்பில் கூட்டறிக்கை ஒன்று இன்று வெளியிடப்பட்டது.

கூட்டறிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி ராஜா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் அமைப்பின் சார்பில் தேவ ராதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் மனோஜ் பட்டாச்சாரியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் தீபங்கள் பட்டாச்சாரியா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.



5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்று வரை பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைகள் 21 முறை உயர்த்தப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணவீக்கம் உயர்ந்து வருகிறது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த விலை குறியீட்டு உயர்ந்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை வரை உணவுப் பொருள்களின் விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது அடிப்படை பொருட்களின் விலை 10.16 சதவீதமும் ஆலை பொருள்களின் விலை 9.1 சதவீதமும் உயர்ந்துள்ளன. இப்பொருள்கள் சில்லரை விலை கடைகளில் விற்கப்படும் பொழுது இவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்திய பொருளாதாரம் உண்மையான தேக்க நிலையில் சிக்கியுள்ளது. கருப்பு சந்தையும் பதுக்கலும் தலைதூக்கி வருகின்றன. 


கடும் நடவடிக்கை எடுத்து இவற்றை ஒடுக்குவதற்கு பதிலாக. இவற்றுக்கு ஆதரவாக மோடி அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் 5 கிலோ இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது போதாது. 5 கிலோ தானியங்களுக்கு பதிலாக 10 கிலோ தானியங்கள் வழங்கப்பட வேண்டும் அத்துடன் உணவு எண்ணெய், பருப்பு வகைகள், மசாலா வகைகள், தேயிலை ஆகியவையும் வழங்கப்பட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி கடந்த சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தகுந்தது.

No comments

Thank you for your comments