Breaking News

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை - 100 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை

சென்னை:

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.6.2021) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள்.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் பரப்புரையில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள்  தீர்வு  காணும்  பொருட்டு  "உங்கள்  தொகுதியில்  முதலமைச்சர்’’ என்ற புதிய துறை  உருவாக்கப்பட்டு, அதன்மூலம் பெறப்பட்ட  4.20 இலட்சம் மனுக்கள் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை (TNeGA) மூலம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில், முதற்கட்டமாக பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்ட 1,52,000 மனுக்களில், 57,845 மனுக்கள் மீது உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவற்றிலிருந்து 3750 மனுக்களுக்கான கோரிக்கைகளுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 54,095 மனுக்கள் தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளன.

மேற்கண்டவையில் உரிய முறையில் தீர்வு காணப்பட்ட 3750 கோரிக்கை மனுக்களுக்கான விவரங்கள் கீழ்க்கண்டவாறு:-

வரிசை எண். தீர்வு காணப்பட்ட கோரிக்கைகளின் விவரங்கள் எண்ணிக்கை


இன்று (03.06.2021) முழுமையாக தீர்வு காணப்பட்ட 3750 மனுதாரர்களில் கீழ்காணும் 12 மனுதாரர்களுக்கு (1) காஞ்சிபுரம் மாவட்டம் செரப்பனஞ்சேரி சேர்ந்த திருமதி.பத்மாவதி இலவச வீட்டுமனைப் பட்டா, (2) காஞ்சிபுரம் ஒரகடத்தைச் சேர்ந்த திருமதி.கன்னிகா அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, (3) தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ம.முகேஷ் அவர்களுக்கு ரூ.1,00,000/-க்கான கல்விக்கடன், (4) கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த  திரு.ரா.கோவிந்தராஜ் அவர்களுக்கு அவர்களுக்கு ரூ.2,50,000/- மானியத்துடன் கூடிய ரூ.12,00,000/- மதிப்பீட்டிலான சுயதொழில் கடன் அனுமதி ஆணை (5) வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.சுதர்சன் அவர்களுக்கு ரூ.2,10,000/-திற்கான பசுமை வீடு, (6) தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த திருமதி.பழனியம்மாள் அவர்களுக்கு ரூ.2,10,000/-திற்கான பசுமை வீடு (7) விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.காந்தியப்பன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையான ரூ.12,00,000/-மதிப்பிலான திறந்தவெளி கிணறு மற்றும் ரூ.41.50 இலட்சத்திலான இதர மூன்று பொது பணிகளுக்கான ஆணைகள் (8) காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தைச் சேர்ந்த பொது மக்களின் கோரிக்கையான சாலை அமைத்திட ரூ.47,90,000/-திற்கான நிர்வாக அனுமதி ஆணை (9) கிருஷ்ணகிரி மாவட்டம் செம்பரசணபள்ளி ஊராட்சியினைச் சேர்ந்த திரு.முனிகிருஷ்ணப்பா அவர்களின் கோரிக்கையான சமுதாயக் கிணறு அமைப்பதற்கு ரூ.12,25,000/-திற்கான நிர்வாக அனுமதி ஆணை (10) விழுப்புரம் மாவட்டம் தடாகம் ஊராட்சியினைச் சேர்ந்த திரு.மனோகர் அவர்களின் கோரிக்கையான கழிவுநீர் வாய்க்கால் அமைத்திட ரூ.20,12,000/-திற்கான நிர்வாக அனுமதி ஆணை (11) திருவாரூர்  மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டாரத்தை சேர்ந்த திரு.புஷ்பநாதன் அவர்களின் கோரிக்கையான தார்சாலை அமைத்திட ரூ.7,80,000/-திற்கான நிர்வாக அனுமதி ஆணை மற்றும் (12) வேலூர் மாவட்டம், கணியம்பாடி வட்டாரத்தைச் சேர்ந்த திரு. தினேஷ் அவர்களின் கோரிக்கையான கொண்டசமுத்திரம் கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல் தேக்கத் தொட்டியினை அமைத்திட ரூ.22,64,000/-திற்கான நிர்வாக அனுமதி ஆணை ஆகிய நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" துறையின் சிறப்பு அலுவலர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

*****

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


No comments

Thank you for your comments