மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
சென்னை:
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், மேகதாது பிரச்சினை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியால் தான் உயிர் பிழைத்தேன் என அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார்.
தமிழக அரசின் எதிர்ப்பால் காவிரி ஆணையத்தின் 3 கூட்டங்களில் மேகதாது பற்றி விவாதிக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேகதாதுவில் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என்று பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments