Breaking News

ஐஜேகே வேட்பாளர் ஆர்.பார்த்தசாரதிக்கு வரவேற்பு கொடுத்த சலவைத் தொழிலாளி

விருத்தாசலம்

விருத்தாசலம் ஐஜேகே வேட்பாளர் ஆர்.பார்த்தசாரதி சலவை செய்து வாக்கு சேகரிப்பு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த சலவைத் தொழிலாளி 



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆர்.பார்த்தசாரதி விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீதி மையம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆட்டோ சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் 

அப்போது வேட்பாளர் பார்த்தசாரதி எம்ஜிஆர் நகர் சலவைத் தொழிலாளி குடியிருப்பில் சலவை செய்து சலவை தொழிலாளி உடைய குழந்தையை தூக்கி மகிழ வைத்து விளையாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அப்பகுதி பெண்கள் வேட்பாளர் பார்த்தசாரதிக்கு ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர்

இதில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஜெயவேல், மாவட்ட பொருளாளர் செல்லத்துரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் பாபு, நகர பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட பார்க்கவகுல சங்கத்தலைவர் ராயர், மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, மாவீரன் மஞ்சள் படை உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments