Breaking News

உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று மருத்துவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்... பரபரப்பு...

தாளவாடி :

ஈரோடு மாவட்டம், தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுகாயம், அவசர சிகிச்சை என சென்றால் சிகிச்சை அளிக்காமல், சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றனர் என்றும் குறிப்பாக மருத்துவர் கோகுல் என்பவர் தொடர்ச்சியாக இங்கு வரும் நோயாளிகளை அலைக்கழிப்பதாகவும், சரியாக சிகிச்சை அளிக்காமல் திட்டி அனுப்புவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், மருத்துவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு... ஏற்பட்டது.


ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணி(42). இவர் அவ்வபோது மின்சார வாரிய ஊழியர்களுடன் இணைந்து, மின்கம்பம்  நடுதல், மின் கம்பியில் உரசியுள்ள மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை தற்காலிகமாக செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று பாரதிபுரத்தில்  மின்கம்பம் மீது படர்ந்திருந்த செடிகொடிகளை  அகற்றுவதற்காக மரம் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக செடியில் இருந்த தேன் பூச்சிகள் அவரைக் கடித்ததில் அவர் காயமடைந்தார். 

உடனடியாக அவரை மீட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த மருத்துவர் கோகுல் என்பவர் அவரை திட்டியதாகவும், சிகிச்சை அளிக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.  இதனை அடுத்து அவரை மீட்டு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர். 

இது குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது "தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுகாயம், அவசர சிகிச்சை என சென்றால் சிகிச்சை அளிக்காமல், சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

குறிப்பாக மருத்துவர் கோகுல் என்பவர் தொடர்ச்சியாக இங்கு வரும் நோயாளிகளை அலைக்கழிப்பதாகவும், சரியாக சிகிச்சை அளிக்காமல் திட்டி அனுப்புவதாகவும் புகார் கூறுகின்றனர்.

எனவே மருத்துவர் கோகுல்  மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து மருத்துவர் கோகுல் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல்  நடக்காது என வட்டார மருத்துவ அலுவலர் உறுதி அளித்தார். இதனையடுத்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments