அரசு அலுவலர்களுக்கு குடிமைப் பணிகள் நாள் வாழ்த்து - பிரதமர் மோடி
புதுடெல்லி:
பிரதமர் திரு.நரேந்திர மோடி, குடிமைப் பணிகள் நாளான இன்று அனைத்து அரசு அலுவலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “குடிமைப் பணிகள் நாளான இன்று அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நல்வாழ்த்துகள். பல்வேறுபட்ட நிலப்பரப்புகளிலும், பலவிதமான துறைகளிலும், நமது குடிமக்களுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்தவும், அவர்கள் அயராது பாடுபட்டு வருகின்றனர். இதே ஊக்கத்துடன் அவர்கள் தேசத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவார்களாக” என்று கூறியுள்ளார்.
Best wishes to all Civil Servants on the occasion of Civil Services Day. In different terrains and across different sectors, they are working tirelessly to help our citizens and enhance national progress. May they keep serving the nation with the same zeal.


No comments
Thank you for your comments