தேர்தல் பிரசார பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி
புதுடெல்லி:
கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளதால் மேற்குவங்கத் தேர்தலுக்கான ஒருநாள் பிரசாரத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலின் மத்தியில் மேற்கு வங்கத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் எஞ்சிய 2 கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்த அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதால் நாளை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த மேற்குவங்க தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் தகவல் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, ‘‘நாளை, கொவிட்-19 நிலவரத்தை ஆய்வு செய்ய உயர்நிலை கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறேன். அதன் காரணமாக, மேற்கு வங்கம் செல்லவில்லை..’’ என தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments