Breaking News

மயிலாப்பூரில் பெண்களை கதறி அழ வைத்த அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை, ஏப்ரல் 1-

சென்னை,மயிலாப்பூர் கன்னிலால்  தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமார்( வயது 45) இவருக்கு பஜார் ரோடு 4வது தெருவில்  எண்ணைய்  கடை உள்ளது.



இன்று காலை "செக்கில் "எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக இயந்திரத்திற்குள் அவருடைய வலது கை சிக்கி மணிக்கட்டடு பகுதியில் கை துண்டானது.

அருகில் இருந்த அவருடைய சகோதரர் துண்டான கையை எடுத்துக்கொண்டும் தன் சகோதரரையும் அழைத்துக்கொண்டும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.

அந்தப் பகுதி நெருக்கமான வணிகப் பகுதி ஆகும். இருமருங்கிலும் பெண்கள் சிறு கடை வைத்திருந்தனர் .

கை துண்டான நிலையில் பதட்டத்துடன் அவரை அழைத்துச் சென்றதால் அந்த தெரு முழுக்க ரத்தம் சிந்தியது. அவர் இருந்த நிலையையும் அளவுக்கு அதிகமாக இரத்தம் கொட்டியதையும்  பார்த்த பெண்கள் கதறி அழுதனர் .  டாக்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ரத்தப் போக்கை தடுத்து அவருடைய உயிரைக் காப்பாற்றவும் துண்டான கையை மறுபடியும் ஒட்ட வைக்கவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments