Breaking News

நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளர் நரசிம்மனுக்கு கொளரவ டாக்டர் பட்டம்

 டாக்டர் பட்டம் பெற்ற பொறியாளருக்கு பாராட்டு

தர்மபுரி, ஏப்ரல் 1:

நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளர் நரசிம்மனுக்கு பன்முக தன்மையை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்கா வாஷிங்டன் தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை சென்னையில் நடந்த விழாவில் வழங்கி சிறப்பித்துள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற பொறியாளர் நரசிம்மனுக்கு தர்மபுரி மாவட்டத்தில் பாராட்டு விழா நடந்தது.



தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளராக பணியற்றி வரும் பொறியாளர் நரசிம்மனின் சமூக சிந்தனை, கதை, கவிதை, கட்டுரை, பயண நூல் வெளியீடு, கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு செய்த உதவிகள், மனிதம் எனும் குறும்படம் மூலம் உதவிடும் குணத்தை படம்பிடித்திருத்தல், பொன்னு விளையற பூமி என்ற பாடல் மூலம் விவசாயத்தின் பெருமையை வெளிப்படுத்தியது, தமிழர் பண்பாட்டு இசை பாடல்களை குறுந்தகடாக வெளியிட்டது என அவரை பொறியாளராக, கவிஞராக, சமூக சேவகராக, பேச்சளராக என கண்டறிந்து அவரின் பன்முக தன்மையை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்கா வாஷிங்டன் தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை சென்னையில் நடந்த விழாவில் வழங்கி சிறப்பித்துள்ளது.

இதையடுத்து தர்மபுரியில் நடந்த பாராட்டு விழாவில் தமிழியக்க செய்தி தொடர்பாளர் அதியமான், தகடூர் தமிழ் குழும தலைவர் கவிஞர் ஜெயபிரகாசம் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments