பிச்சை எடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள்.... மத்திய அரசு மீது டெல்லி ஐகோர்ட் கேள்வி
புதுடெல்லி:
"பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள். நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?" என டெல்லி உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி தலைநகரில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்நிலையில் "பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள். நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?" - என டெல்லி உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.15 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பல மாநிலங்களில் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, பொது மக்களைக் காப்பாற்றுவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள்., எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமாக இன்று அறிவுறுத்தி உள்ளது.
No comments
Thank you for your comments