Breaking News

கஞ்சா பதுக்கி வைத்து சிறுவர்களுக்கு விற்பனை செய்த வாலிபர் கைது...

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா, போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டார். 


இந்நிலையில்  குளச்சல் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. சணல் குமார் அவர்கள் காவல் ஆளினர்கள் சகிதம் குளச்சல் அருகே உள்ள ஒரு பள்ளிகூடம் பகுதியில் வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குளச்சல் பகுதியை சேர்ந்த முகமது இர்ஷாத்(28) என்பது தெரியவந்தது. பின்பு போலீசார்  அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக சுமார் 150 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். குறிப்பாக இவர் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.  பின்பு கஞ்சாவை பறிமுதல்  செய்த போலீசார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments

Thank you for your comments