Breaking News

ஈரோட்டில் பல்வேறு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - மாவட்ட ஆட்சியர்

ஈரோடு:

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில்   834 படுக்கைகளும், தற்காலிக கொரோனா வைரஸ்  சிகிச்சை மையங்களில் 2,550 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாளது வரை 5,07,418 நபர்கள்  கொரோனா பரிசோதனை (RTPCR மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் நாளது வரை 17,295 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 28.04.2021 வரை 1,29,098 நபர்கள் கொரோனா வைரஸ்  தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 



இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது. 

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், சில புதிய கட்டுப்பாடுகளுடன், 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் நாளது வரை 20,253 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, இதில் 17,295 நபர்கள் குணமடைந்துள்ளனர். 2799 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கைகளும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 208 படுக்கைகளும் மற்றும் கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, அந்தியூர் அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை என 834 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 480 நபர்களும், புற நோயாளிகள் 182 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்காலிக கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை மையங்களாக (Covid Care Centre), கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 500 படுக்கைகளும், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 150 படுக்கைகளும், அந்தியூர் ஐடியல் பள்ளியில் 1,500 படுக்கைகளும், வேளாளர் பொறியியல் கல்லூரி விடுதியில் 150 படுக்கைகளும், செங்குந்தர் கல்லூரியில் 100 படுக்கைகளும், கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளும், நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளும், திங்களுர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளும், சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளும், சென்னிமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளும் என 2550 படுக்கைகள் தயார்  நிலையில் உள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் 1823 நபர்கள் வீட்டில்  தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். லோட்டஸ் மருத்துவமனை மற்றும் ரிசர்ச் சென்டரில் 75 படுக்கைகளும், சுதா மருத்துவமனையில் 263 படுக்கைகளும், அபிராமி கிட்னி கேர் சென்டரில் 75 படுக்கைகளும், ஈரோடு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் 40 படுக்கைகளும், வீனா மருத்துவமனையில் 100 படுக்கைகளும், ஈரோடு எஸ்.கே.மருத்துவமனையில் 40 படுக்கைகளும், ஈரோடு சி.எஸ்.ஐ.மருத்துவமனையில் 100 படுக்கைகளும், ஈரோடு எமெர்ஜென்சி கேரில் 70 படுக்கைகளும், ஸ்ரீஹரி மருத்துவமனையில் 40 படுக்கைகளும், கல்யாணி கிட்னிகேர் சென்டரில் 100 படுக்கைகளும்,  சி.கே. மருத்துவமனையில் 60 படுக்கைகளும், பீ.வெல் மருத்துவமனையில் 25 படுக்கைகளும், செந்தில் பல்நோக்கு மருத்துவமனையில் 90 படுக்கைகளும், ஈரோடு மெடிக்கல் சென்டரில் 100 படுக்கைகளும் என 1178 படுக்கைகள் தனியார் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் நாளது வரை 5,07,418 நபா;கள் கொரோனா பரிசோதனை (RTPCR மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 28.04.2021 வரை 1,29,098 நபர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு இணையதளத்தில் பதிவு செய்ய தெரியாத நபர்களுக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் மதியம் 3.00 மணி முதல் 5.00 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்து, மறுநாளே தடுப்பூசி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

எனவே, கொரோனா வைரஸ் தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது. மேலும், அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கான அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவரின் ஆலோசனைகளை பெற வேண்டும். மேலும், பொது இடங்களுக்கு வரும் பொழுது கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும். பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்பொழுது முககவசம் அணியாமல் இருந்தால் ரூ.200/- அபராதம் விதிக்கப்படும். 

மேலும் கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களை முககவசம் அணியாமல் அனுமதித்தாலோ, அல்லது அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட கடைகள் / நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு, ரூ.5,000/- வரை அபராதம் விதிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மேலும், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 24 மணிநேரமும் இயங்கும் அவசரகால கட்டுப்பாட்டு மைய ஈரோடு மாவட்ட எண்ணான 0424-1077, 0424-2260211 (Erode District Help line)  என்ற எண்ணிலும், 9791788852 என்ற வாட்ஸ் அப் (WhatsApp எண்ணிலும், மாநில உதவி எண்ணான (Tamilnadu State Helpline 1075 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு.


No comments

Thank you for your comments