Breaking News

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: - வாக்குகள் பதிவுகள் 5 மணி நிலவரம் 64.92%

சென்னை:

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணியிலிருந்து வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், முக்கிய பிரபலங்கள் வாக்கு மையங்களுக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தி இருக்கின்றனர்.  

தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். சில இடங்களில் வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சற்று நேரமானது. சில இடங்களில் அதிமுக- திமுக தொண்டர்கள் மோதிக்கொண்டனர். சில இடங்களில் பூத் சிலிப் உடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது.

காலை 11:00 மணி நிலவரப்படி தமிழகத்தில் 26.29 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது.

மதியம் 1:00 மணி நிலவரப்படி தமிழகத்தில் 39.61 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாலை 3:00 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளது

சென்னையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 36.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

நெல்லையில் 41.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தர்மபுரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 61.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.

செங்கல்பட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 44.67% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடலூரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 55.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கோவையில் பிற்பகல் 3  மணி நிலவரப்படி, 51.74% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரியலூரில் பிற்பகல் 3  மணி நிலவரப்படி, 57.48% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மாலை 5:00 மணி நிலவரப்படி 64.92% வாக்குகள் பதிவாகியுள்ளது

மதியம் 3 மணி வரை இரண்டு மணி நேர இடைவெளியில் சராசரியாக 13 சதவீத வாக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 3 மணியில் இருந்து 5 மணி வரை 10.25 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளது.

சென்னையில் 49.95 சதவீத வாக்குகளும், 

நாமக்கல்லில் அதிகபட்சமாக 74.99 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

திருநெல்வேலியில் 60.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதியில்  மொத்த வாக்குகள் 

901645  -67.37%  பதிவாகி உள்ளன

சங்கரன்கோவில்  தெகுதியில் 169751- 67.01%

வாசுதேவநல்லூர் தொகுதியில்  160714- 66.66.%

 கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 185171- 63.86 % 

தென்காசி தொகுதியில் 200114- - 68.18%

 ஆலங்குளம் தொகுதியில் 185895 - 71.38%





No comments

Thank you for your comments