உத்தரகாண்டில் மீண்டும் பனிச்சரிவு- சுமார் 400 ராணுவ வீரர்கள் நிலை என்ன?
சங்மோலி:
உத்தரகாண்ட்டில் ஏற்கனவே பனிச்சரிவு விபத்தில் மீட்பு பணி நடந்து வரும் நிலையில் மீண்டும் பனிப்பாறைகள் உடைந்து விழுந்துள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி பகுதியில் பனிப்பாறை உடைந்து அங்குள்ள தவுலி கங்கா, ரிஷி கங்கா, அலகநந்தா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் அங்கு கட்டுமானப் பணிகள் நடந்து வந்த மின் நிலையத்துக்குள்ளும் சுரங்க பாதையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள், பொதுமக்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடந்ததில் பலர் பிணமாக மீட்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வரும் நிலையில் இதுவரை 80 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 126 பேர் பேரை காணவில்லை.
இந்த நிலையில் உத்தரகாண்ட்டில் ஏற்கனவே பனிச்சரிவு விபத்தில் மீட்பு பணி நடந்து வரும் நிலையில் மீண்டும் பனிப்பாறைகள் உடைந்து விழுந்துள்ளன. அந்த மாநிலத்தின் சமோலி மாவட்டம் சும்னா கிராமத்தில் உள்ள இந்தியா-சீனா எல்லை பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதற்கிடையே அங்கு நேற்று பனிப்பாறைகள் உடைந்து விழுந்தன. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலர் சிக்கி கொண்டனர். அதே போல் சாலை கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களும் வெளியேற முடியாமல் சிக்கினர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டனர்.
இதுகுறித்து ராணுவம் தரப்பில் கூறும்போது, சும்னா கிராமம் மற்றும் மலாரி பகுதி இடையே எல்லை சாலை அமைப்பு அலுவலகம் அருகே பனிப்பாறைகள் உடைந்து விழுந்தன. அங்கு ராணுவத்தினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தது.
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் வேகமாக ஈடுபட்டனர். இதில் 384 எல்லை பாகாப்பு படை வீரர்களை மீட்டனர்.
நள்ளிரவில் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை மீண்டும் மீட்புப் பணி தொடங்கப்பட்டது. பனிப்பாறைகள் சரிந்தவுடன் முதல் கட்டமாக 55 வீரர்கள் மீட்கப்பட்டனர் என்றும் இரவு எல்லை சாலை அமைப்பு அலுவலகத்தில் சிக்கிய 150 வீரர்கள் மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத் டுவிட்டரில் கூறியதாவது:-
சும்னா கிராமத்தில் பனிப்பாறை உடைந்து விழுந்துள்ளது. இதையடுத்து மின் நிலையங்களில் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். இரவில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நிகழக்கூடாது என்பதற்காக என்.டி.பி.சி. மற்றும் பிற திட்டங்களில் பணிகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை பெற மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பனிப்பாறை வெடிப்பு பற்றிய தகவல்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டு அறிந்து கொண்டார். உதவிகளை அளிக்க உறுதி அளித்தார் என்று தெரிவித்தார். பனிப்பாறைகள் உடைந்ததில் இதுவரை எந்த உயிரிழப்பு பற்றி தகவலும் இல்லை.
இதுகுறித்து உத்தரகாண்ட் டி.ஜி.பி. அசோக்குமார் கூறும்போது,
“பனிப்பாறை வெடிப்பில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற தகவலை நாங்கள் சேகரிக்க முயற்சிக்கிறோம். மோசமான வானிலை காரணமாக சரியான நிலைமையை எங்களால் அறிய முடியவில்லை” என்றார்.
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் வேகமாக ஈடுபட்டனர். இதில் 384 எல்லை பாகாப்பு படை வீரர்களை மீட்டனர். 10 பேர் உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டது. 8பேரில் நிலை என்னவென்று தெரியவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ரிஷி கங்கா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்று தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.



No comments
Thank you for your comments