ஏப்.26ம் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது அரசு... திரையரங்குகள் உட்பட பலவற்றை மூட உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. ஏப் 26ம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருக்கின்றன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
- மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி.
- தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி, நின்று பயணிக்க அனுமதி இல்லை
- ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி
- வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி
- ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம்.
- சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.
- கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை.
- திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
- இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.
- அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
- உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.
- உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.
- மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.
- திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், உடற்பயிற்சி கூடங்களை மூட உத்தரவு.
- புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம். அரசு இணையதளத்தில் இ-பாஸ் தொடர்பாக விண்ணப்பித்து, அனுமதி கிடைத்ததும் தமிழகம் வர அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments