Breaking News

18 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி 24-ஆம் தேதி முதல் பதிவு செய்ய அழைப்பு

புதுடெல்லி:

18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


18 வயது நிரம்பிய அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 19ம் தேதியன்று அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 24ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று பேசிய சுகாதார ஆணையர் தலைமை நிர்வாகி ராம் சேவக் சர்மா வியாழன் அன்று அறிவித்தார்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உள்ளே 50 முதல் 60 கோடி பேர் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இப்பொழுது விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எந்த தடையும் இல்லை என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அன்று அறிவித்தது அதன்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர்களை வரும் 24ஆம் தேதி முதல் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக பதிவு செய்யும் 50 முதல் 60 கோடி பேருக்கான விவரங்களை பதிவு செய்ய மத்திய அரசு தனது உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம், மாநில அரசு மருத்துவமனைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒரு நாள் தடுப்பூசி மருந்து விற்கப்படும் என்று மத்திய அரசு விதிகளின்படி முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

18 வயதுக்கு மேல் பதிவுசெய்து உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் கால அட்டவணை மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் வெளியிட்டதும் அதனடிப்படையில் அவர்களுக்கு எந்தத் தடுப்பூசி போடப்படும் என்ற விவரத்தை மத்திய அரசு தனது இணையதளம் மூலம் தெரிவிக்கும்.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் தடுப்பூசியை உற்பத்தி செய்து மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது. இந்தியாவின் சீரம்  நிறுவனம் தற்பொழுது கோவி ஷீல்டு தடுப்பூசி மருந்து இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் வரும் ஜூலை மாதம் வரை தங்கள் உற்பத்தியை அதிகரித்து தர முடியாது .அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் ஜூலை மாதத்துக்கு பிறகே தடுப்பூசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசி கிட்டத்தட்ட ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு இறக்குமதியாகும் என்று தெரிகிறது. 

மாநில அரசின் தடுப்பூசி மையங்களிலும் ஆன்லைன் மூலமாகவோ 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம். மருத்துவமனைக்கு தங்களால் நாளொன்றுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட எத்தனை பேருக்கு தடுப்பூசி போட முடியும் என்று பட்டியலை வெளியிட்டது அதன் அடிப்படையில் தடுப்பூசி போட விரும்புவோருக்கு தகவல் அழைப்புகள் கோவிட்-19  இணையதளத்தில் வெளியாகும் என தேசிய சுகாதார ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி ராம் சேவக் சர்மா அறிவித்தார்.

No comments

Thank you for your comments