திட்டமிட்டபடி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்!
அமராவதி :
ஆந்திராவில் திட்டமிட்ட தேதியில் 10, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உச்சகட்டமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், 10ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.
அதேபோல மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பொதுத் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளன. மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், கொரோனா சூழலைக் கருத்தில்கொண்டு பொதுத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்று விரைவில் முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என்று அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 10ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 7 முதல் ஜூன் 16 வரை நடைபெற உள்ளன. இண்டர் தேர்வுகள் மே 6ம் தேதி தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments