Breaking News

வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி-மத்திய அரசு

புதுடெல்லி, ஏப்.21-

நாட்டி மக்கள் அனைவரும் இணைந்தால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றும் தடுப்பு மையங்களைச் சரியாக ஏற்படுத்துவதன் மூலம் மீண்டும் லாக்டவுன் வருவதைத் தடுக்கலாம் என்றும் வரும் மே 1ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் பிரதமர் மோடி நேற்று தெரிவித்துள்ளார்

The Prime Minister, Shri Narendra Modi addressing the nation on the COVID-19 situation through video conferencing, in New Delhi on April 20, 2021

இந்தியாவில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் வருகிற மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி அறிமுகம் ஆனது. அப்போது முன்கள பணியாளர்கள், சுகாதாரப் பணியார்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டது. அதன்பின் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரத்தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதுகுறித்து பிரதமர் மோடி உரையாற்றுகையில், 

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவல் நிலை குறித்து பிரதமர் மோடி நேற்று தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

பிரதமர் மோடி உரையில், கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் துக்கத்தில் நான் பங்கெடுக்கிறேன், மக்களின் கஷ்டம் எனக்குப் புரிகிறது. கொரோனா வைரஸ் தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்து வந்துள்ளது. இப்போதைய பாதிப்பிலிருந்தும் நம்மால் மீண்டு வர முடியும். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க முடியும் என நான் நம்புகிறேன். 

மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பாடுபடுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். நம்முடைய பொறுமையை நாம் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. ஆக்சிஜன் தேவையைப் பூர்த்த செய்யவும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாட்டு ஏற்படாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்ததைவிட மருந்து உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், மருந்துகள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாம் நாட்டில்தான் உலகின் மிகப் பெரிய மருந்து நிறுவனங்கள் உள்ளன. எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. மிகக் குறுகிய காலத்தில் அதிகளவிலான மருந்துகளை உற்பத்தி செய்துள்ளோம். 

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் தடுப்பூசி இந்தியவில் தான் வழங்கப்படுகிறது. நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தற்போது நாட்டில் 12 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, முன்களப் பணியாளர்கள் முதியவர்களுக்கு பெரும்பாலும் தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. 

18 வயதுக்கு மேற்பட்டோரும் வரும் மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம், நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கும் நடுத்தர பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

50% தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு நேரடியாகவே வழங்கப் படுகின்றன. பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். வெளி மாநில தொழிலாளர்கள் வெளியேறாத வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாஸ்க்குகள் முதல் வென்டிலேட்டர்கள் வரை பெரியளவில் உற்பத்தி செய்து சாதனை செய்துள்ளோம். கடந்த ஆண்டு இருந்த மோசமான நிலை தற்போது இல்லை. எனவே முவு லாக்டவுன் தேவையில்லை. அது கடைசிக் கட்டம்தான். 

அடுக்குமாடிக் குடியிருப்புகள், தெருக்களில் குழுக்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களைச் செய்ய இளைஞர்கள் பரப்ப வேண்டும். நாம் கட்டுப்படுவதன் மூலம் கொரோனா கட்டுப்படுத்த முடியும். அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வேண்டும் என்றார். இவ்வா£று பிரதமர் கூறினார்.


No comments

Thank you for your comments