வேலூர் மாநகராட்சி ஆணையரை கண்டித்து அலுவலர்கள் போராட்டம்!... மன்னிப்பு கோரிய ஆணையர் சங்கரன்...!
வேலூர், மார்ச் 22:
வேலூர் மாநகராட்சி ஆணையரை கண்டித்து அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி ஆணையர் கோரிக்கைளை ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
வேலூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று காலை ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சி ஆணையராக சங்கரன் பணியேற்ற காலத்தில் இருந்து பணியாளர்களை அவதூறாகவும், மிகவும் தரம் தாழ்த்தியும் பேசி வருகிறார். வசூல் பணியில் தமக்கு ஒதுக்கப்பட்ட இலக்கினை முடித்து வந்த வருவாய் உதவியாளர் சதாசிவம் என்பவரை காலை 8 மணிக்கு வரவழைத்து இரவு 9.30 மணி வரையில் மனரீதியாக துன்புறுத்திய காரணத்துக்காக அவர் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார் என்ற குற்றச்சாட்டு ஆணையர் சங்கரன் மீது எழுந்துள்ளது.
சதாசிவத்துக்கு நேர்ந்த நிகழ்வு தங்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்று வலியுறுத்தி மாநகராட்சி அலுவலர்கள் இன்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று இனிவரும் காலங்களில் நடைபெறாத வகையில் தங்களை பாதுகாத்து கொள்ளவும், ஆணையர் சங்கரனை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இந்த உள்ளிருப்பு போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது சங்கரன் அலுவலகத்துக்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். பின்னர், மாநகராட்சி ஆணையர் கோரிக்கைளை ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில தலைவர், மாநில பொதுச்செயலாளர் சீதாராமன், மாநில துணைச்செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாக இறந்த சதாசிவத்தின் திருவுருவப்படம் திறப்பு விழா செய்து, மலர் தூவி அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதில் மாநகராட்சி அலுவலர்கள் ஒற்றுமையுடன் ஒருமித்த கருத்துகொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் தாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகராட்சி அலுவலர்களுக்கு தொடர்ந்து மனரீதியான அழுத்தத்தையும் பணிச்சுமையும் தொடர்ந்து கொடுத்து வந்தார் என்று பலமுறை காலச்சக்கரம் நாளிதழ் சுட்டிக்காட்டியது. இனியாவது இதுபோன்று அலுவலர்களுக்கு மன உளைச்சல் ஏற்படா வண்ணம் நடந்து கொள்ளவேண்டும்...
மனஉளைச்சல் கொடுக்கும் அதிகாரிகள் மீது அரசு துறை ரீதியான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டால் மட்டுமே இதற்கு தீர்வாகும்..





No comments
Thank you for your comments