Breaking News

அமமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை

சென்னை:

அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் கூட்டணி தொடர்பாக எல்.கே.சுதீஷ் போனில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகிய நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், அமமுக சார்பில் பழனியப்பன், மாணிக்கராஜாவும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் கூட்டணி தொடர்பாக எல்.கே.சுதீஷ் போனில் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments

Thank you for your comments