Breaking News

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- முதல்வர் பழனிசாமி

சென்னை, மார்ச் 11:

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தமிழகத்தில் இதுவரை 11.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செலுத்திக் கொண்டார்.  

பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை முதலமைச்சர் பழனிசாமி  இன்று செலுத்திக்கொண்டார்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு தடுப்பூசி செலுத்தும்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் உடனிருந்தனர்.

இதன்பின்னர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:-

60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 11.25லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 2,682 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்


No comments

Thank you for your comments