Breaking News

ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் மீது புகார்

ஈரோடு:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியிட மாறுதல் செய்வதற்கு பணம் கேட்டு அலைக்கழிப்பு செய்வதாக ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு வனத்துறை அலுவலர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் மீது தமிழ்நாடு வனச்சரக அலுவலர் சங்கத்தினர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கள இயக்குனர் அவர்களிடம் புகார் அளித்துள்ளானர்.



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்  கடம்பூர் வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் ஜீரகள்ளி வனச்சரகர் முத்து ஆகிய இருவரும் பணியமர்த்தி ஒன்றரை  ஆண்டுகள்  ஆகின்றன.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிடம் மாறுதல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் எந்த குற்றச்சாட்டு இல்லாமல் திடிர் பணி மாறுதல் செய்து லஞ்சம்  கொடுத்தால்  மட்டுமே அவர்களுக்கான இடம் ஒதுக்கப்படும் என கூறி அலைக்கழிப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் புலிகள் காப்பக உட்கோட்டம் அந்தியூர், பர்கூர் ஆகிய வனச்சரங்களுக்கு  மத்திய, மாநில அரசு  திட்ட பணி கமிஷன் கேட்பதாகவும்,  வன ஊழியர்கள் பணிச்சுமை ,மன உளைச்சல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் நிகார்ரஞ்சன் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வனத்துறை அலுவலர்கள் சங்கம் தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் வனச்சரகர்கள்  சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபாசங்கர்  அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர். இச்சம்பவத்தால் மிழ்நாடு வனத்துறை அலுவலர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments