Breaking News

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம்- வாக்கெடுப்பை இந்தியா புறகணிப்பு

ஐ.நா.   

போர்க்குற்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களிக்க இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது.



இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று இன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு வந்தது.

அப்போது இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், நமிபியா, கேமரூன், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

வங்காளதேசம், பொலிவியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வெனிசுலா உள்பட 11 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது.

முன்னதாக,  தங்கள் நாட்டுக்கு எதிரான இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளை இலங்கை அரசு கேட்டுக்கொண்டது,

இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை போர்க்குற்ற தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. 


No comments

Thank you for your comments