Breaking News

மது விற்பனையை முறைப்படுத்த கலெக்டர் திடீர் ஆலோசனை!

திருப்பத்தூர்,மார்ச்23-

திருப்பத்தூர் மாவட்டத்தில் மது விற்பனையை முறைப்படுத்த கலெக்டர் ஆலோசனை_நடத்தினார்.



_திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுபான விற்பனையை முறைப்படுத்தவும், ஒட்டு மொத்தமாக மதுபானம் விற்பனையைத் தடுக்க வலியுறுத்தியும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவன் அருள் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது_*

_கூட்டத்தில் கலெக்டர் சிவன்அருள் பேசியதாவது& டாஸ்மாக் விற்பனையாளர்கள் எந்தக் காரணத்துக்காகவும் ஒட்டு மொத்தமாக மதுபான பாட்டில்களை விற்கக்கூடாது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் பார்வையாளர்களும் உரிய அறிவுரையை வழங்கி கண்காணித்த வண்ணம் உள்ளதால், இதில் எந்தவித விதி மிறல்கள் இல்லாதவாறு மதுபான விற்பனை செய்ய வேண்டும் என்பதை உறுதி மொழியாக அனைத்து பணியாளர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்._இவ்வாறு அவர் பேசினார்._

No comments

Thank you for your comments