Breaking News

கிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் தீ வைப்பு...

கிருஷ்ணகிரி,மார்ச் :

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பெரியாரின் சிலை அவமதிப்பு செய்ததற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 



கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியாரின் வெண்கல சிலை ஒன்று உள்ளது. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பெரியாரின் வெண்கல சிலைக்கு டயர் அணிவித்து தீ வைத்து சென்றுள்ளனர். இதனை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  



பெரியாரின் சிலைக்கு தீ வைத்து அவமதிப்பு செய்த நபர்களை கைது செய்யக்கோரி அப்பகுதியில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து, பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.  தமிழகத்தில் பெரியார் சிலைகள், எம்ஜிஆர் சிலைகள் அவமதிப்பு செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு இடத்தில் இதுபோல் சிலைகளை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்தால் வேறு இடத்தில் அவமதிப்பு தொடர்கிறது. இந்த செயலால் தமிழக மக்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெரியாரின் சிலை அவமதிப்பு செய்ததற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மூட நம்பிக்கையை தீ வைத்து எரித்தவரின் சிலையை தீ வைத்து எரிப்பதா? என்று கோபக்கணையை வீசி வருகின்றனர். நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்களா? நீங்கள் சிலையை வேண்டுமானால் அவமதிப்பு செய்யலாம். ஆனால் உங்களுக்காக பெரியார் வகுத்த சிந்தனைகளை அவமதிப்பு செய்ய முடியாது. அவை என்றும் மக்கள் மனதில் வாழும் என்று தெரிவித்தனர்.  தமிழகத்தில் பெரியார் சிலைகள், எம்ஜிஆர் சிலைகள் அவமதிப்பு செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த செயலால் தமிழக மக்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments

Thank you for your comments