புர்காவுக்கு தடை விதிக்க வாக்கெடுப்பு நடத்திய சுவிட்சர்லாந்து
பேர்ன், மார்ச் 8-
சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பொது வாக்கெடுப்பில் 51.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், சுவிஸ் அரசாங்கம் தனது அரசியலமைப்பில் இஸ்லாமிய புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட முக மறைப்புகளை பொது இடங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமாக்குவதற்கான ஒரு பிரிவை அறிமுகப்படுத்தும்.
பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது குறிக்கவில்லை என்றாலும் சில ஐரோப்பிய நாடுகளில் புர்கா தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை சுவிட்சர்லாந்திலும் நடைமுறைப் படுத்தும் நோக்கில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சுமார் ஒரு ஆண்டுகாலம் நடந்த விவாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வுக்கு அதிகளவில் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பொது வாக்கெடுப்பில் 51.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், சுவிஸ் அரசாங்கம் தனது அரசியலமைப்பில் இஸ்லாமிய புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட முக மறைப்புகளை பொது இடங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமாக்குவதற்கான ஒரு பிரிவை அறிமுகப்படுத்தும். அவ்வாறு செய்யும்போது, இதுபோன்ற ஆடைகளை ஏற்கனவே பொதுவில் தடை செய்துள்ள அண்டை நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகளுடன் சுவிட்சர்லாந்தும் இணைந்துகொள்ளும்.
ஞாயிற்றுக்கிழமை வெளியான இறுதி முடிவுகளில் நாட்டின் 26 மண்டலங்களில் ஆறு மட்டுமே இந்த முயற்சியை நிராகரித்தது தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக புர்கா தடை முடிவுக்கு 51.2% மக்களே ஆதரவு தெரிவித்துள்ளனர். 130 ஆண்டுகளில் சுவிஸ் மக்களின் முன்முயற்சி ஏற்றுக்கொள்ளப்பட்டது இது 23 வது முறையாகும், அதுமட்டுமின்றி 2014 க்குப் பிறகு இது முதல் முறையாகும் என தெரிய வந்துள்ளது.
தடை விதிப்பதற்கான முன்மொழிதலுக்கு சுவிட்சர்லாந்து அரசே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது. இருந்தாலும் இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடந்துள்ளது. அதே நேரத்தில் இந்த தடை அமலுக்கு வந்தால் சில விலக்குகளும் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
அந்த நாட்டின் மக்கள் தொகையில் 5.5 சதவிகித மக்கள் தான் இஸ்லாமியர்கள். இருந்தாலும் இந்த தடைக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆதரவும் ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து வீதிகளில் இது தொடர்பான பதாகைகளும் பறக்கின்றன.
ஆனால், சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் 400,000 இஸ்லாமியர்களில் மிக சொற்ப எண்ணிக்கையிலான மக்களே இதுபோன்ற முகம் மறைக்கும் ஆடைகளை அணிவதாக நீதித்துறை அமைச்சர் Karin Keller-Sutter சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த பொது வாக்கெடுப்பானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என தாம் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments