ஹஜ் யாத்திரை... கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு
ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில்,
புனித ஹஜ் யாத்திரை வரும் யாத்திரை வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சவுதியில் உள்ளவர்கள் மட்டுமே ஹஜ் சென்று வரும் நிலையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது குறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.


No comments
Thank you for your comments