தருமபுரி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி வாக்கு சேகரிப்பு
தருமபுரி, மார்ச் 23-
தருமபுரி மாவட்டம், தருமபுரி சட்டமன்ற தொகுதியில் நேற்று (22.3.2021) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பா.ம.க. வேட்பாளார் எஸ்.பி. வெங்கடேஸ்வரனை ஆதரித்தும் அதிமுகவின் செயல் திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கி, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.
தருமபுரி சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆற்றிய உரை விவரம் வருமாறு:
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற பா.ம.க. கட்சியின் வெற்றி வேட்பாளார் திரு. எஸ். பி. வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.
அதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலே கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற கழக வெற்றி வேட்பாளார் திரு ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
தருமபுரி மாவட்டத்தில், மாண்புமிகு அம்மா அவர்கள், ஏழை, எளிய மாணவர்களும் குறைந்த கட்டணத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக பொறியியல் கல்லூரியை கொடுத்தார்கள். என் தலைமையிலான அம்மாவின் அரசு குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் சட்டம் படிக்க வேண்டும் என்பதற்காக ரூ.70 கோடியில் சட்டக் கல்லூரியை அமைத்துக் கொடுத்துள்ளோம். அதே போல பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளோம்.
ஒரு மாநிலம் உயர வேண்டும் என்றால் கல்வித்தரம் நன்றாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் மாண்புமிகு அம்மா அவர்கள் அனைருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிக நிதியினை ஒதுக்கி, கல்வியில் புரட்சி மறுமலர்ச்சியினை கொண்டு வந்து, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். 2011ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியிலே 100-க்கு 32 சதவிகிதம் பேர் தான் உயர்கல்வி பயின்று வந்தார்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் தற்போது 100-க்கு 49 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் உயர்ந்திருக்கிறது.
மாண்புமிகு அம்மா அவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், புத்தகங்கள், மிதிவண்டிகள் போன்றவற்றை வழங்கினார்கள். அறிவுப்பூர்வமாக கல்வி பெறுவதற்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்ற மாணவர்களோடு போட்டிபோட்டு ஜெயிக்க வேண்டும் என்பதற்காக 12,000 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி 52.31 லட்சம் மாணவர்களுக்கு அம்மாவின் அரசு வழங்கி இருக்கிறது. இதற்காக ரூ.7,322 கோடி செலவிடப்படுள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் நல்ல கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்தினை அடைய வேண்டும் என்பதற்காக, அம்மாவின் அரசு, பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களை கட்டிக் கொடுக்கின்றது. புதிய பள்ளி கட்டடங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசை போன்றவை ஏற்படுத்தப்பட்டு, தனியார் பள்ளிக்கு இணையான கல்வி கற்கும் சூழ்நிலையை உருவக்கி உள்ளது. ஏழை என்ற சொல் எதிர் காலத்தில் இருக்கக்கூடாது அதுதான் அண்ணா தி.மு.கவின் நோக்கம்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு அம்மா அவர்கள் 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், நான் முதலமைச்சராக வந்தவுடன் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்து, அதை செயல்படுத்திக் காட்டினார்கள். தமிழக வரலாற்றில் ஒரு அரசு இரண்டு முறை பயிர்கடன் தள்ளுபடி செய்தது இல்லை. அந்த சாதனையையும் அம்மாவின் அரசு நிகழ்த்தியுள்ளது.
இது உங்கள் அரசு, மக்களின் அரசு. ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு வரும் அம்மாவின் அரசு மீண்டும் தொடர, தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற பா.ம.க. கட்சியின் வெற்றி வேட்பாளார் எஸ். பி. வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலே கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற கழக வெற்றி வேட்பாளார் ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து பெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டு விடை பெறுகிறேன். இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றினார்.

No comments
Thank you for your comments